Friday, June 10, 2011

கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள்





கம்ப்யூட்டரில் நாம் பணியாற்றிக் கொண்டிருக்கையில், குறிப்பாக பழைய விண்டோஸ் பதிப்புகளில், திடீரென ஸ்கிரீன் முழுக்க நீல நிறமாக மாறி வெள்ளை நிற எழுத்துக்களில் ஏதோதோ செய்திகள் வரும். நாம் ஒரு நிமிஷம் என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்போம். தயாரித்துக் கொண்டிருந்த பைல் சேவ் செய்யப்படாமல் உழைப்பை இழந்து விடுவோமா எனப் பதட்டம் அடைவோம். அவசர பயத்தில் எதை எதையோ செய்து பின் கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்வோம். இந்த மாதிரி செய்திகள் பலவகைகள் உள்ளன. இப்படிப்பட்ட செய்திகள் வரும்போது பதட்டப்படாமல் அது என்ன எனப் படித்து அறிய வேண்டும். அதற்கான காரணத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.
நீங்கள் இயக்கும் கம்ப்யூட்டரின் இயக்கத்தில் வழக்கத்திற்கு மாறான அல்லது கம்ப்யூட்டரின் சிபியு எதிர்பார்க்கும் செயல்பாடு இல்லாத நிலையிலேயே இந்த பிழைச்செய்திகள் வருகின்றன. இங்கு சில முக்கிய பிழைச்செய்திகளையும் அவை கிடைப்பதற்கான காரணத்தையும் அத்தகைய சூழ்நிலைகளை எப்படித் தவிர்க்கலாம் என்பதனையும் காணலாம்.
This program is not responding End Now Cancel நீங்கள் இயக்கிக் கொண்டிருக்கும் புரோகிராம் கம்ப்யூட்டருடன் தொடர்ந்து தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியாத நிலை வருகையில் இந்த செய்தி கிடைக்கிறது. புரோகிராம் ஏதாவது ஒரு செயல்பாட்டில் கிராஷ் ஆகி இருக்கும். End Now / Cancel என இரு வழிகளுடன் உங்களுக்கு செய்தி கிடைக்கும். இது பொதுவாக பழைய கம்ப்யூட்டர்களில் ஏற்படும். புரோகிராமினைச் சிக்கலான செயல்பாட்டிற்கு உட்படுத்தி இருப்போம். அதற்கான செயல்வேகம் இல்லாத போது இந்த செய்தி கிடைக்கலாம். இந்நிலையில் Cancel கிளிக் செய்து புரோகிராம் மீண்டும் இயங்குகிறதா எனப் பார்க்கலாம். அல்லது End Now கிளிக் செய்து புரோகிராமை மூடிப் பின் மீண்டும் இயக்கலாம். இவ்வாறு முடிக்கையில் நாம் கடைசியாக சேவ் செய்தவரையில் பைல் கிடைக்கும். சேவ் செய்யாமல் மேற்கொண்ட பணிகளை இழக்க வேண்டியது தான்.
Non system disk or disk error. Replace and press any key when ready.
ஒரு கம்ப்யூட்டரை ஸ்டார்ட் செய்திட அதற்கான டிஸ்க்கைக் கம்ப்யூட்டர் படிக்க இயலாத போது இந்த செய்தி கிடைக்கும். இது பெரிய தவறு இல்லை. நீங்கள் இதற்கு முன் கம்ப்யூட்டரைப் பயன்படுத்திய பிளாப்பி டிஸ்க்கை அதன் டிரைவில் இருந்து எடுக்காமல் விட்டிருப்பீர்கள். அப்படி இருந்தால் டிஸ்க்கை எடுத்துவிட்டு ஸ்டார்ட் செய்திடவும். இல்லை எனில் இது ஹார்ட் வேர் பிரச்னையாக இருக்கும். மின்சாரத்தை நிறுத்திவிட்டு கேபினைத் திறந்து அனைத்து கேபிள்களும் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா எனச் சோதித்து சரி செய்திடவும். பின் கம்ப்யூட்டரை இயக்கவும். மீண்டும் இயங்கவில்லை என்றால் கம்ப்யூட்டர் மெக்கானிக்கைக் கூப்பிடவும்.
An exception OE has occured அனைத்து புரோகிராம்களும் இயங்குவதற்கு மெமரி தேவைப்படுகிறது. ஒவ்வொன்றுக்கும் தேவையான மெமரியை கம்ப்யூட்டர் வழங்குகிறது. ஆனால் ஒரு புரோகிராம் தனக்கு அனுமதி வழங்கப்படாத மெமரி இடத்தை ஆக்ரமிக்க முற்படுகையில் இந்த செய்தி கிடைக்கிறது. இந்த செய்தி அடிக்கடி கிடைத்தால் அண்மையில் இன்ஸ்டால் செய்த புரோகிராமை நீக்கிப் பார்க்கவும். அல்லது வேறு ஏதேனும் மாற்றங்கள் செய்திருந்தால் அதனை முன்பிருந்தபடி அமைக்கவும். இதற்கு System Restore என்ற புரோகிராம் உங்களுக்கு உதவும்.
An error has occurred in your program. To keep working anyway, click ignore and save your work to a new file. To quit this program, click Close” இயக்கப்படும் புரோகிராமில் ஏதேனும் புரோகிராமிங் பிழை (bug) இருப்பின் இந்த செய்தி கிடைக்கும். இந்த செய்தி காட்டப்பட்டாலும் அந்த புரோகிராமினை உங்களால் தொடந்து இயக்க முடியும். அப்படி விரும்பினால் Ignore என்பதைக் கிளிக் செய்து தொடருங்கள். உங்கள் பணியை புதிய பெயருள்ள பைலில் சேவ் செய்திடுமாறு செய்தி கிடைத்துள்ளது. ஏற்கனவே நீங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிற பைல் கெட்டுப் (corrupt) போயிருக்கலாம். எனவே புதிய பெயர் கொடுத்து சேவ் செய்து பணியைத் தொடரவும்.
Duplicate Name exists இது போன்ற செய்தி நெட்வொர்க்கில் பணியாற்றுகையில் வரும். நெட்வொர்க்கில் இணைந்துள்ள ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஒரு பெயர் உண்டு. இல்லை எனில் கம்ப்யூட்டரை நெட்வொர்க்கில் இயக்க முடியாடு. இந்த செய்தி கிடைத்தால் ஏற்கனவே இதே பெயரில் இன்னொரு கம்ப்யூட்டர் அந்த நெட்வொர்க்கில் உள்ளது என்று பொருள். எனவே நீங்கள் இயக்க விரும்பும் கம்ப்யூட்டரில் மை கம்ப்யூட்டர் ஐகானை வலது புறமாகக் கிளிக் செய்து Computer Name என்னும் டேபைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Change என்பதைக் கிளிக் செய்து கம்ப்யூட்டருக்குப் புதிய பெயர் ஒன்றைக் கொடுத்து பின் ஓகே அழுத்தி வெளியில் வந்து கம்ப்யூட்டரைத் தொடர்ந்து இயக்கவும்.
A runtime error has occurred. Do you wish to debug? இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பினை இயக்குகையில் இந்த செய்தி கிடைக்கும். இது நீங்கள் இணையத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் வெப் சைட் உருவாக்கத்தில் உள்ள பிழையினால் ஏற்படுவது. இதனால் சிறிதும் கவலைப்பட வேண்டாம். debug செய்வது என்பதெல்லாம் புரோகிராமர்கள் பார்க்க வேண்டிய சமாச்சாரம். இந்த மாதிரி செய்தி எல்லாம் பின் எனக்கு ஏன் வருகிறது என்று நீங்கள் கவலைப் பட்டால் இப்படிப்பட்ட செய்தி வருவதனைத் தடுத்துவிடலாம். Tools பிரிவு சென்று Internet Optionsகிளிக் செய்து பின் Advanced டேபைத் தேர்ந்தெடுக்கவும். பின் Browsing பிரிவில் Disable Script Debugging என்பதில் டிக் செய்துவிட்டு ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி இந்த பிழை செய்தி கிடைக்காது.
The margins of section … are set outside the printable area of the page. Do you want to continue? in Word பல பிரிண்டர்கள் ஒரு தாளின் முழு அளவில் ஒரு பக்கத்தினை அச்சடிக்காது. மார்ஜின் ஸ்பேஸ் என்று சொல்லப்படும் நான்கு பக்க இட வெளி அச்சடிக்கத் தேவை. மேற்காணும் செய்தி மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் கிடைத்தால் No என்பதில் கிளிக் செய்து பின் அந்த டாகுமெண்ட்டின் பேஜ் செட் அப் சென்று பார்த்து மார்ஜின் மற்றும் பேப்பர் அளவை மாற்ற வேண்டும். அச்செடுப்பதற்கு முன் பிரிண்ட் பிரிவியூ பார்த்தால் எந்த அளவில் பிரிண்ட் ஆகும் எனத் தெரியும். அதற்கேற்ற வகையில் அளவைச் சரி செய்து பின் பிரிண்ட் கொடுக்க வேண்டும்.

TIPS FOR WINDOWS SHORT CUT KEY







விண்டோஸ் 7 ஷார்ட்கட் கீகள்
சகர்களின் வேண்டுகோளுக்கிணங்க விண்டோஸ் 7 ஷார்ட் கட் கீகளின் ஒரு தொகுப்பு முன்பு தரப்பட்டது. இதோ இரண்டாவது தொகுப்பினையும் பெற்றுக் கொள்ளுங்கள்.


  • Win + Pause சிஸ்டம் கண்ட்ரோல் பேனல் ஆப்லெட் காட்டப்படும்.

  • Win + E விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும். டிபால்ட்டாக மை கம்ப்யூட்டர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.

  • Win + F பைல் அல்லது போல்டர்களைத் தேடுவதற்கான சர்ச் விண்டோ திறக்கப்படும்.

  • Win + Ctrl + F நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை சர்ச் செய்வதற்கான சர்ச் விண்டோ காட்டப்படும்.

  • Win + L உங்கள் கம்ப்யூட்டர் லாக் செய்யப்படும்; அல்லது கம்ப்யூட்டரைப் பயன்படுத்து பவரிடையே மாறிக் கொள்ளலாம்.

  • Win + M திறந்திருக்கும் அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும்.

  • Win + Shift + M மினிமைஸ் செய்யப்பட்ட அனைத்து விண்டோக்களும் மீண்டும் திரைக்கு வரும்.

  • Win + P பிரசன்டேஷன் டிஸ்பிளே வகை தேர்ந்தெடுக்கப்படும்.

  • Win + R ரன் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.

  • Win + U அக்செஸ் சென்டர் திறக்கப்படும். விண்டோஸ் எக்ஸ்பியில் யுடிலிட்டி மேனேஜர் போல இது திறக்கப்படும்.

  • Win + X விண்டோஸ் மொபிலிட்டி சென்டர் திறக்கப்படும்.
டெஸ்க் டாப்பில் ஷார்ட் கட்
ஏறத்தாழ அனைத்து புரோகிராம்களுக்கும் ஷார்ட் கட் உண்டு. இவை ஸ்டார்ட் மெனுவில் பார்க்கலாம். இல்லாதவற்றிற்கு நாமாக ஷார்ட் கட் அமைத்திடுகையில் அது டெஸ்க்டாப்பிலேயே அமைக்கப்படும். ஷார்ட் கட் இல்லாத புரோகிராமிற்கு அமைக்க விரும்பினால், ஸ்டார்ட் (Start) கிளிக் செய்து ஆல் புரோகிராம்ஸ் (All Programs) தேர்ந்தெடுத்துப் பின் அந்த குறிப்பிட்ட புரோகிராமின் மீது கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் சென்ட் டூ (Send To) என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் கிடைக்கும் பிரிவுகளில் டெஸ்க் டாப் (Desktop) என்பதைத் தேர்ந்தெடுத்தால், டெஸ்க் டாப் மீது ஷார்ட் கட் அமைக்கப்படும்.
கடைசி பக்கத்திலிருந்து பிரிண்ட்
அதிக பக்கங்களில் இருக்கும் வேர்ட் டாகுமெ ண்ட் ஒன்றைப் பிரிண்ட் எடுத்து முடிக்கையில், தாள்கள் எல்லாம் வரிசையாக பக்கம் 1,2,3 என இல்லாமல் 40,39 என இருப்பதைக் காணலாம். இதனை மீண்டும் ஒவ்வொரு தாளையும் சரி செய்திட இன்னும் அதிக நேரம் ஆகும். இதனை எப்படி மாற்றலாம்? அச்சிட்டபின் நமக்கு வேலை இல்லாமல் செய்திடலாம்?
*
கடைசி பக்கத்தை முதலில் பிரிண்ட் செய்து பின் அப்படியே இறுதியிலிருந்து முதல் பக்கம் வரை டாகுமெண்ட் ஒன்றை அச்செடுக்கும்படி செய்திடலாம். இவ்வாறு அச்சிட்டுப் பெற கீழே கொடுத்துள்ளபடி செட் செய்திடவும்.
* Tools
கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். நிறைய டேப்களுடன் Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் Print என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் “Printing options” என்ற பகுதியில் உள்ள “Reverse print order” என்பதில் கிளிக் செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடி வெளியேறவும்.

எக்ஸெல் பார்முலா





எக்ஸெல் ஒர்க் ஷீட்களில் பலவகை பார்முலாக்களை அமைக்கிறோம். இவற்றில் சில பார்முலாக்கள் ஒர்க்ஷீட்களில் உள்ள மற்ற செல்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் அமைக்கப்படும். அப்படிப்பட்ட பார்முலா ஒன்றைக் காப்பி செய்து வேறு ஒரு செல்லில் காப்பி செய்கையில், எக்ஸெல் அந்த பார்முலாவினை, காப்பி செய்யப்படும் செல்லுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்துக்கொள்ளும். ஆனால் பல ஒர்க் ஷீட்கள் அமைந்த ஒர்க் புக்கில் ஒர்க்ஷீட் பெயர் உள்ள பார்முலாவினைக் காப்பி செய்கையில், எக்ஸெல் அந்த செல்களுக்கு ஏற்றவகையில்தான் மாற்றங்களை மேற்கொள்ளும். ஒர்க்ஷீட்களின் பெயர்களில் மாற்றம் செய்யாது. அதனையும் மாற்றிக் கொள்ளும் வழியை இங்கு காணலாம்.
எடுத்துக்காட்டாக, B7 செல்லில் =B6+A7 என்னும் பார்முலாவினை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். இதனை D7 என்னும் செல்லுக்கு காப்பி செய்கையில், எக்ஸெல் தானாக செல் தொடர்புகளை மாற்றிக் கொள்கிறது. மேலே சொன்ன பார்முலா =D21+C22 என மாற்றப்படும். ஆனால் ஒர்க்ஷீட் பெயர் இணைந்த பார்முலாவில் இந்த மாற்றம் முழுமையாக நடைபெறாது. ஒர்க்ஷீட் பெயர் மாற்றம் இருக்காது. எடுத்துக்காட்டாக, ஒர்க்புக் ஒன்றில் January, February, மற்றும் March என மூன்று ஒர்க்ஷீட்கள் வைத்துள்ளீர்கள். பிப்ரவரி ஒர்க்ஷீட்டில் =January!B7*1.075 என்ற பார்முலாவினை அமைத்திருக்கிறீர்கள். இந்த செல் பார்முலாவினை மார்ச் ஒர்க்ஷீட்டிற்கு மாற்றுகையில், எக்ஸெல் பார்முலாவில் உள்ள செல் தொடர்பை (B7) நீங்கள் மாற்றம் செய்திடும் செல்லுக்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொள்ளும். ஆனால் ஒர்க்ஷீட்டின் பெயர் பிப்ரவரி என மாறாது. உங்கள் ஒர்க்ஷீட்டில் ஒன்றிரண்டு ஒர்க்ஷீட்கள் இருந்தால், நீங்களாக இந்த மாற்றத்தினை மேற்கொள்ளலாம். அதிக எண்ணிக்கையில் ஒர்க்ஷீட்கள் இருந்தால் அது சிரமமான வேலையாக இருக்கும். இந்த சிரமத்தைப் போக்கும் வழியைப் பார்க்கலாம்.

1. முதலில் அனைத்து பார்முலாக்களையும் தேவையான ஒர்க்ஷீட்டிற்கு, தேவைப்படும் செல்லிற்கு மாற்றிக் கொள்ளுங்கள். இப்போது செல் பெயர்களில் எக்ஸெல் மாற்றத்தை மேற்கொண்டிருக்கும். அனைத்து காப்பி மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்ட பின், காப்பி செய்யப்பட்ட ஒர்க்ஷீட்டிற்குச் செல்லவும்.

2. இனி Ctrl+A அழுத்தவும். இது அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்கும்.

3. பின் எடிட் மெனு சென்று அதில் Replace தேர்ந்தெடுக்கவும். அல்லது Ctrl+H அழுத்தவும். இப்போது Find and Replace டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.

4. இதில் Find What பாக்ஸில் January! என டைப் செய்திடவும்.
5. அடுத்து Replace With பாக்ஸில் February! என டைப் செய்திடவும்.

6. பின் Replace All என்பதில் கிளிக் செய்தால் காப்பி செய்யப்பட்ட பார்முலாக்களில் உள்ள அனைத்தும் மாற்றப்படும். இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நாம் மேலே உள்ள ஸ்டெப் 4 மற்றும் 5ல் மாற்றுவது மாதங்களின் பெயரை அல்ல. பார்முலாவில் உள்ள சிறப்பு குறியீட்டுடன் உள்ள பெயரை மட்டுமே. ஏனென்றால் ஒர்க்ஷீட்டில் உள்ள மற்ற செல்களில் மாதங்களின் பெயர் இருந்தால், அவையும் இந்த மாற்றத்தில் மாற்றம் அடையும் அல்லவா!
எக்ஸெல்: பார்முலா கண்காணிப்பு
எக்ஸெல் தொகுப்பில் பெரிய அளவிலான ஸ்ப்ரெட் ஷீட்டில் பணியாற்றிய அனுபவம் பலருக்கும் உண்டு. அதில் பல்வேறு செல்களில் பார்முலாக்களைப் போட்டிருப்போம். செல்களில் மதிப்புகளைத் தருகையில் இந்த பார்முலாக்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாய் கணக்குகளை மேற்கொண்டு முடிவுகளை செல்களில் அமைக்கும்படி ஏற்பாடு செய்திருப்போம். இதனால் புதிய பார்முலாக்கள் அமைக்கையில் அவை தொடர்புடைய செல்களில் சரியாகச் செயலாற்றி விடைகளைத் தருகிறதா என்பதைக் கண்காணிக்க பல இடங்களில் உள்ள செல்களுக்குச் சென்று பார்க்க வேண்டியதிருக்கும். சில நேரங்களில் தவறான செல்களைப் பார்த்து தவறான தகவல்கள் மற்றும் பார்முலாக்களைத் தரும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு. இவற்றைத் தவிர்க்க எக்ஸெல் தொகுப்பு தரும் வசதி தான் எக்ஸெல் வாட்ச் விண்டோ.
அடுத்தடுத்து எக்ஸெல் பார்முலாக்கள் கணக்கிடுவதனைக் கண்காணிக்க நமக்குக் கிடைத்திருக்கும் வசதிதான் வாட்ச் விண்டோ. நாம் செல்களின் மதிப்பை மாற்றும்போதெல்லாம் சம்பந்தப்பட்ட செல்களில் என்ன மாறுதல்கள் ஏற்படுகிறது என்று நமக்குக் காட்டும் ஜன்னல் தான் இந்த வாட்ச் விண்டோ. இதனால் நாம் ஒவ்வொரு செல்லுக்கும் தாவிச் சென்று கண்காணிக்கும் வேலை மிச்சமாகிறது. இந்த வாட்ச் விண்டோவினை அமைத்திட முதலில் Tools மெனு சென்று அதில் துணை மெனுவான Formula Auditing என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின் அதில் உள்ள Show Watch Window என்பதனைக் கிளிக் செய்திட வேண்டும். Formula Auditing விண்டோவில் கண்கண்ணாடி படத்துடன் உள்ள சிறிய பிரிவுதான் Watch Window. இதனை கிளிக் செய்தவுடன் நமக்கு வாட்ச் விண்டோ கிடைக்கும். இப்போது எந்த செல்லில் உள்ள பார்முலா செயல்படுவதனைக் கவனிக்க விரும்புகிறீர்களோ அதனைத் தேர்ந்தெடுத்து Add Watch என்னும் பட்டனை அழுத்த வேண்டும். இப்போது வாட்ச் விண்டோவில் பார்முலா சம்பந்தப்பட்ட செல்கள் அவற்றின் மதிப்பு, கணக்கிடப்பட்ட விடை ஆகியவை தெரியும். இதே போல எந்த பார்முலாக்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க விரும்புகிறீர்களோ அவற்றை வரிசையாகத் தேர்ந்தெடுத்து Add பட்டனை அழுத்தினால் அவை அனைத்தும் Watch விண்டோவில் சேர்க்கப்படும். இந்த விண்டோனை மானிட்டரின் எந்த மூலையிலும் வைத்துக் கொள்ளலாம். இனி செல்களில் மதிப்புகளை மாற்றும் போதெல்லாம் இந்த பார்முலாக்கள் மூலம் எந்த செல்களில் மதிப்புகள் மாறுகின்றன என்று இந்த ஒரே விண்டோவில் கண்காணிக்கலாம். ஏதாவது ஒரு பார்முலா செயல்படுவதனைக் கண்காணிக்க விரும்பவில்லை என்றால் அதனை தேர்ந்தெடுத்து Delete Watch button ஐ அழுத்தி நீக்கிவிட்டு மற்ற பார்முலாக்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கலாம். ஒவ்வொரு செல்லுக்காய் மவுஸ் மூலம் ஓடி ஓடிப் பார்ப்பதனைத் தவிர்த்து ஒரே ஜன்னலில் அனைத்தையும் கண்காணிப்பது எவ்வளவு எளிது பாருங்கள்.
எக்ஸெல் ஷார்ட்கட் கீகள்
காமென்ட்ஸ் உள்ள செல்களை மட்டும் செலக்ட் செய்திட கண்ட்ரோல்+ஷிப்ட்+ஓ (Ctrl+Shft+O) அழுத்தவும். எந்த செல்லிலும் கமென்ட்ஸ் இல்லை என்றால் No cells found என்ற செய்தி கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும். Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.
ஷிப்ட் + ஆரோ கீ (Shft+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shft+Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
ஷிப்ட் + ஹோம் கீகள் (Shft+Home) அழுத்தப்படுகையில் படுக்கை வரிசையின் முதல் செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட்+ ஹோம் (Ctrl+Shft+ Home) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க் ஷீட்டின் முதல் செல் வரை நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட் + எண்ட் (Ctrl+Shft+End) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க்ஷீட்டில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட செல் வரையில் நீட்டிக்கப்படும்.
என்டர் கீ (Enter) அழுத்தப்படுகையில் அந்த செல் முடிக்கப்பட்டு கர்சர் கீழாக உள்ள செல்லுக்குச் செல்லும்.

கண்டறிந்து மாற்று (Find and Replace)










வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு சொல் அல்லது சொல் தொடருக்குப் பதிலாக நாம் வேறு சொற்களை அல்லது சொல் தொடர்களை அமைக்கலாம். இதற்காக ஒவ்வொன்றாகத் தேடித் தேடி அமைக்க வேண்டிய தில்லை. இந்த தொகுப்பில் உள்ள Find and Replace டூல் இந்த செயலை மேற்கொள்ளும். ஆனால் இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. நாம் மாற்றி அமைக்க விரும்பும் டெக்ஸ்ட் 255 கேரக்டர்களுக்குள் இருக்க வேண்டும். இல்லையே சிக்கல் ஏற்படும். அல்லது ஏதேனும் கிராபிக் ஆப்ஜெக்டாக இருந்தாலும், இதன் மூலம் மேற்கொள்ள முடியாது. ஆனால் இந்த விதியை நாம் மாற்ற முடியும். அதற்கான வழியை இங்கு பார்க்கலாம்.
1. முதலில் எந்த டெக்ஸ்ட் அல்லது கிராபிக்ஸ் படத்தை மாற்ற வேண்டுமோ, அதனை காப்பி செய்து கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லுங்கள். காப்பி செய்தாலே அது கிளிப் போர்டில் அமர்ந்து கொள்ளுங்கள்.
2. அடுத்து எடிட் (Edit) மெனு செல்லுங்கள். வேர்ட் 97 மற்றும் பின்னர் வந்தவேர்ட் தொகுப்புகளில் Find and Replace பாக்ஸ் கிடைக்கும். அதற்கு முந்தைய தொகுப்புகளில் (இன்னும் நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தால்) ரீபிளேஸ் டயலாக் பாக்ஸ் தனியே கிடைக்கும்.
3. Find What பாக்ஸில், எந்த டெக்ஸ்ட்டின் இடத்தில் நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட் அல்லது படத்தை ரீபிளேஸ் செய்திட வேண்டும் என்பதனை அமைத்திடுங்கள்.
4. அடுத்து Replace With பாக்ஸில் ^c அழுத்துங்கள். இந்த கட்டளை வேர்டுக்கு கிளிப் போர்டில் உள்ளதை இங்கு கொண்டு வா என்று சொல் கிறது.
5. அடுத்து Find Next என்பதில் கிளிக் செய்தி டவும்.
இப்படி யே நீங்கள் விரும்பிய வகையில் ரீபிளேஸ் செய்திடலம.

கண்டறிந்து மாற்று (Find and Replace)










வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு சொல் அல்லது சொல் தொடருக்குப் பதிலாக நாம் வேறு சொற்களை அல்லது சொல் தொடர்களை அமைக்கலாம். இதற்காக ஒவ்வொன்றாகத் தேடித் தேடி அமைக்க வேண்டிய தில்லை. இந்த தொகுப்பில் உள்ள Find and Replace டூல் இந்த செயலை மேற்கொள்ளும். ஆனால் இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. நாம் மாற்றி அமைக்க விரும்பும் டெக்ஸ்ட் 255 கேரக்டர்களுக்குள் இருக்க வேண்டும். இல்லையே சிக்கல் ஏற்படும். அல்லது ஏதேனும் கிராபிக் ஆப்ஜெக்டாக இருந்தாலும், இதன் மூலம் மேற்கொள்ள முடியாது. ஆனால் இந்த விதியை நாம் மாற்ற முடியும். அதற்கான வழியை இங்கு பார்க்கலாம்.
1. முதலில் எந்த டெக்ஸ்ட் அல்லது கிராபிக்ஸ் படத்தை மாற்ற வேண்டுமோ, அதனை காப்பி செய்து கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லுங்கள். காப்பி செய்தாலே அது கிளிப் போர்டில் அமர்ந்து கொள்ளுங்கள்.
2. அடுத்து எடிட் (Edit) மெனு செல்லுங்கள். வேர்ட் 97 மற்றும் பின்னர் வந்தவேர்ட் தொகுப்புகளில் Find and Replace பாக்ஸ் கிடைக்கும். அதற்கு முந்தைய தொகுப்புகளில் (இன்னும் நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தால்) ரீபிளேஸ் டயலாக் பாக்ஸ் தனியே கிடைக்கும்.
3. Find What பாக்ஸில், எந்த டெக்ஸ்ட்டின் இடத்தில் நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட் அல்லது படத்தை ரீபிளேஸ் செய்திட வேண்டும் என்பதனை அமைத்திடுங்கள்.
4. அடுத்து Replace With பாக்ஸில் ^c அழுத்துங்கள். இந்த கட்டளை வேர்டுக்கு கிளிப் போர்டில் உள்ளதை இங்கு கொண்டு வா என்று சொல் கிறது.
5. அடுத்து Find Next என்பதில் கிளிக் செய்தி டவும்.
இப்படி யே நீங்கள் விரும்பிய வகையில் ரீபிளேஸ் செய்திடலம.

யு-டியூப்பில் இருந்து வீடியோக்கள் டவுண்லோட்



யு–ட்யூப்பில் பதிந்து வைத்துள்ள வீடீயோ கிளிப்கள் எதைப் பார்த்தாலும், உடனே அதனை டவுண்லோட் செய்து இறக்கி வைத்துக் கொள்ள ஆசையாக இருக்கும். இதற்காகவே பல யு–ட்யூப் டவுண்லோட் புரோகிராம்கள் பல இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில் பல கண்டிஷன்கள் இருக்கும். சில 60% மட்டுமே டவுண்லோட் செய்திடும். சில 10 அல்லது 20 முறை மட்டுமே டவுண்லோட் செய்திட அனுமதிக்கும். சில குறிப்பிட்ட நாள் வரை மட்டுமே இயங்கும். அல்லது கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்.இவற்றின் மூலம் ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே டவுண்லோட் செய்திட முடியும். ஒரே நேரத்தில் பல யு–ட்யூப் வீடியோக்களை முழுமையாக டவுண்லோட் செய்திடும் வகையில் இணையத்தில் புரோகிராம் ஒன்று கிடைக்கிறது. இதன் பெயர் 1Click YouTube Batch Downloader. இதனை http://eurekr.com /index.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். ஒன்றுக்கு மேற்பட்ட யு–ட்யூப் வீடியோக்களை, அவற்றின் இணையதள முகவரி சென்று தேடிப் பெற்று காப்பி செய்வதனைக் காட்டிலும், இதன் மூலம் ஒரேகிளிக்கில் காப்பி செய்திடலாம். அது மட்டுமின்றி, இந்த வீடியோக்களை mp4, wmv, மற்றும் mov என்ற பார்மட்டுகளுக்கு மாற்றவும் இந்த புரோகிராம் உதவுகிறது. அத்துடன் பல வீடியோ பைல்களை ஒரே பைலாக மாற்றும் வசதியையும் இது தருகிறது.

குரோம் எக்ஸ்டென்ஷன் வசதிகள்


பயர்பாக்ஸ் பிரவுசருக்கென ஆயிரக்கணக்கில் ஆட் ஆன் புரோகிராம்கள் இருப்பது போல, குரோம் பிரவுசருக்கும் பல கூடுதல் வசதிகளைத் தரும் புரோகிராம்கள், இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றை எக்ஸ்டென்ஷன் புரோகிராம்கள் என அழைக்கின்றனர். குரோம் பதிப்பு 4 அண்மையில் வெளியான போது, இது போன்ற புதிய வசதிகள் 1,500 இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த புரோகிராம்கள், நாம் குரோம் பிரவுசர் வழியாக இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்கையில், கூடுதல் வேலைகளுக்கான வசதிகளை எளிதாகவும், எளிமையாகவும் தருகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
பாப் அப் விண்டோவில் விக்கிபீடியா: ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்து விக்கிபீடியா தளம் சென்று தேடுபவரா நீங்கள்? நீங்கள் கூகுள் குரோம் பிரவுசரில், இன்டர்நெட் பிரவுசிங் செய்திடுகையில், விக்கிபீடியா பார்ப்பவராக இருந்தால், இனி புதிய டேப் அமைத்து, தளம் திறந்து பார்க்க வேண்டியதில்லை. பார்க்கின்ற தள விண்டோவிலேயே, ஒரு பாப் அப் விண்டோவில் விக்கிபீடியா தளத்தினைக் காணும் வசதி கிடைத்துள்ளது. விக்கிபீடியா கம்பேனியன் (Wikipedia Companion) என்னும் இந்த புதிய வசதி இந்த பாப் அப் விண்டோவைத் தருகிறது. விக்கிபீடியா கம்பேனியன் மூலம், குரோம் பிரவுசர் விண்டோவின் இடது பக்கத்தில் ஒரு விக்கிபீடியா பட்டன் ஒன்றை உருவாக்கலாம். மேலும் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் சார்ந்த விக்கிபீடியா தளத்தினைப் பார்ப்பவராக இருந்தால், அதற்கான செட்டிங்ஸையும் மேற்கொண்டு, அதே பாப் அப் விண்டோவில் காணலாம். ஒரே கிளிக் மூலம் இதனை மேற்கொள்ளலாம்.


1. முதலில் கூகுள் குரோம் பிரவுசர் மூலம் கீழ்க்காணும் முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். https://chrome.google.com /extensions/detail/dhgpkiiipkgmckicafkhcihkcldbde. இந்த தளம் விக்கிபீடியா கம்பேனியன் என்னும் ஆட் ஆன் எக்ஸ்டென்ஷன் புரோகிராமினைக் கொண்டிருக்கும். அதில் உள்ள இன்ஸ்டால் பட்டனில் கிளிக் செய்தால், Confirm Installation என மீண்டும் ஒரு இன்ஸ்டால் பட்டன் தரப்படும். இதில் கிளிக் செய்தால், இந்த புரோகிராம் இன்ஸ்டால் ஆகும். இதன்பின் விக்கிபீடியா ஐகானைக் கிளிக் செய்து பிரவுசரைத் திறக்கவும். இதில் ஆப்ஷன்ஸ் என்னும் லிங்க்கினைக் கிளிக் செய்தால், எந்த மொழி விக்கிபீடியா முதன்மையானதாகவும் (Primary) எந்த மொழியில் உள்ள விக்கிபீடியா இரண்டாவது நிலையிலும் (Secondary) தேவைப்படும் என்பதனை செட் செய்திடலாம். விக்கிபீடியா தளத்தினை தனி டேப் மூலம் திறக்க விரும்பினாலும், அதன்படி செட் செய்திடலாம்.
2. பிரவுசரில் நோட்பேட் : இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்கையில், சிறிய குறிப்புகளை எழுத எண்ணுகிறீர்கள். இதற்கென நோட்பேட், வேர்ட்பேட் அல்லது வேறு ஒரு வேர்ட் ப்ராசசரைத் திறந்து, குறிப்புகளை அமைப்பது என்றால், அது சுற்றி வளைத்து வேலை பார்ப்பதாக இருக்கும். இருப்பினும் வேறு வழியில்லை. இந்த சிக்கலைத் தீர்ப்பதற்காக, குரோம் பிரவுசருக்குள்ளாகவே நோட்பேட் இயங்கும் வகையில் ஒரு எக்ஸ்டென்ஷன் புரோகிராம் கிடைக்கிற. குரோம்பேட் (Chrome Pad) என்பது இதன் பெயர். https://chrome.google.com/e xtensions/detail/kodgendbhboaendecabighpnngpodeij என்ற முகவரியில் உள்ள தளத்தில் இந்த புரோகிராமினைப் பெறலாம். இங்கு சென்று அங்குள்ள Install பட்டனில் கிளிக் செய்தால், Confirm Installation என மீண்டும் ஒரு Install பட்டன் தரப்படும். இதில் கிளிக் செய்தால், இந்த புரோகிராம் இன்ஸ்டால் ஆகும். இதன்பின் சிறிய பேட் உங்கள் குறிப்புகளுக்கென கிடைக்கும்.
3.யு–டியூப் சர்ச்: கூகுள் குரோம் பிரவுசரில் ஏதேனும் ஒரு தளத்தினைக் காண்கையில், அந்த பொருள் குறித்த வீடியோ ஏதேனும் யு–டியூப் தளத்தில் உள்ளதா என்று அறிய விரும்பலாம். அப்போது புதிய டேப் ஒன்றைத் திறந்து, அதில் யு–டியூப் தளம் சென்று தேட வேண்டிய திருக்கும். அல்லது சர்ச் பாக்ஸில் உங்கள் வீடியோ குறித்த சொல் கொடுத்துத் தேடிப் பின் மீண்டும் அந்த தளம் செல்ல வேண்டியதிருக்கும். இந்த வேலைப் பளுவினைக் குறைக்கும் வகையில் “Fast YouTube Search” என்னும் எக்ஸ்டென்ஷன் புரோகிராம் ஒன்று தரப்பட்டுள்ளது. இதன் மூலம் யு–டியூப் சர்ச் பட்டன் ஒன்றை பிரவுசரில் ஒட்ட வைத்துக் கொள்ளலாம். இந்த எக்ஸ்டென்ஷன் புரோகிராமினைப் பெற https://chrome.google .com/extensions/detail/ggkljdkflooidjlkahdnfgodflkelkai என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இங்கு சென்று அங்குள்ள Install பட்டனில் கிளிக் செய்தால், Confirm Installation என மீண்டும் ஒரு Install பட்டன் தரப்படும். இதில் கிளிக் செய்தால், இந்த புரோகிராம் இன்ஸ்டால் ஆகும். பின் அட்ரஸ் பார் வலது பக்கத்தில் “YouTube” என்று ஒரு பட்டன் கிடைக்கும். இதில் கிளிக் செய்தால்,சர்ச் பாக்ஸ் ஒன்று தரப்படும். இதில் உங்கள் தேடுதல் சொற்களை அமைத்துத் தேடவும். அதன்பின் மேக்னிபையிங் கிளாஸ் பட்டனில் கிளிக் செய்து சம்பந்தப்பட்ட வீடியோக்களைக் காணலாம். உங்கள் தேடுதல் சொற்களை அமைக்கும்போதே, அதற்கான சில கூடுதல் குறிப்புகளும் காட்டப்படும்.
4. கால்குலேட்டர்: கூகுள் தேடல் இஞ்சினில் கால்குலேட்டர் இணைந்தே வருகிறது. இதில் சில அடிப்படை கணக்குகள், கரன்சி மாற்றும் கணக்குகள், அளவை அலகு மாற்றங்கள் ஆகியவற்றைக் கணக் கிடலாம். இருப்பினும், ஏதேனும் ஒரு இன்டர்நெட் வெப்சைட்டில் இருக்கையில், அதனை விட்டு இன்னொரு டேப்பில் கூகுள் தேடல் தளம் சென்று, கால்குலேட்டரை இயக்குவது சிரமமாகும். இதனைத் தீர்க்க குரோமி கால்குலேட்டர் (“Chromey Calculator”) என்னும் எக்ஸ்டென்ஷன் புரோகிராம் ஒன்று தரப்பட்டுள்ளது. இதன் மூலம் கால்குலேட்டர் பட்டன் ஒன்றை, நேரடியாக குரோம் பிரவுசரிலேயே அமைக்கலாம்.இதில் கிளிக் செய்வதன் மூலம் கூகுளின் கால்குலேட்டரைப் பெற்று இயக்கலாம். இந்த கால்குலேட்டரில் சில மதிப்புகளை (Values) குறியீடுகளுக்கு பொருத்தி கணக்கிடலாம்.
இந்த எக்ஸ்டென்ஷனைப் பெற்று இயக்க https://chrome.google.com/extensions/detail/acgimceffoceigocablmjdpebeodphgc என்னும் முகவரியில் உள்ள தளம் செல்லவும். மேலே கூறப்பட்டுள்ளபடியே இங்கும் இன்ஸ்டால் செய்திடவும். “Chromey Calculator” இன்ஸ்டால் செய்யப்படும். அட்ரஸ் பாரில் இதற்கான பட்டன் கிடைக்கும். இதனை அழுத்தி கால்குலேட்டரைப் பெற்று இயக்கலாம்.

5. டேப்பில் ரைட் கிளிக் மெனு: இது எக்ஸ்டென்ஷன் புரோகிராம் குறித்தது அல்ல. டேப்கள் செயல்பாடு குறித்தது. கூகுள் குரோம் பிரவுசரில் உள்ள டேப்களில் ரைட் கிளிக் செய்து, கூடுதல் டேப் செயல்பாடுகளுக்கான வசதிகளைப் பெறலாம். இதில் உள்ள டேப்பில் ரைட் கிளிக் செய்தால் மெனு ஒன்று கிடைக்கும். அதில் கீழ்க்காணும் வசதிகள் தரப்படும். அவை:
Duplicate: அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் தளத் தகவல்கள் இன்னும் ஒரு கூகுள் குரோம் விண்டோவில் நகலாகக் கிடைக்கும்.
Close other Tabs: அப்போதைய டேப் தவிர, மீதம் உள்ள டேப்களில் உள்ள தளங்கள் அனைத்தும் மூடப்படும்.
Close Tabs to the Right: அப்போது தேர்ந்தெடுத்து கிளிக் செய்யப்படும் டேப்பிற்கு வலது பக்கம் உள்ள டேப்கள் அனைத்தும் மூடப்படும்.
Reload: அந்த டேப்பில் உள்ள தளத்தினை மீண்டும் லோட் செய்திடும். இதனை Ctrl + R அழுத்தியும் பெறலாம்.
Close Tab: அந்த டேப்பில் உள்ள தளத்தினை மூடும்.