Friday, June 10, 2011

எக்ஸெல் பார்முலா





எக்ஸெல் ஒர்க் ஷீட்களில் பலவகை பார்முலாக்களை அமைக்கிறோம். இவற்றில் சில பார்முலாக்கள் ஒர்க்ஷீட்களில் உள்ள மற்ற செல்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் அமைக்கப்படும். அப்படிப்பட்ட பார்முலா ஒன்றைக் காப்பி செய்து வேறு ஒரு செல்லில் காப்பி செய்கையில், எக்ஸெல் அந்த பார்முலாவினை, காப்பி செய்யப்படும் செல்லுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்துக்கொள்ளும். ஆனால் பல ஒர்க் ஷீட்கள் அமைந்த ஒர்க் புக்கில் ஒர்க்ஷீட் பெயர் உள்ள பார்முலாவினைக் காப்பி செய்கையில், எக்ஸெல் அந்த செல்களுக்கு ஏற்றவகையில்தான் மாற்றங்களை மேற்கொள்ளும். ஒர்க்ஷீட்களின் பெயர்களில் மாற்றம் செய்யாது. அதனையும் மாற்றிக் கொள்ளும் வழியை இங்கு காணலாம்.
எடுத்துக்காட்டாக, B7 செல்லில் =B6+A7 என்னும் பார்முலாவினை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். இதனை D7 என்னும் செல்லுக்கு காப்பி செய்கையில், எக்ஸெல் தானாக செல் தொடர்புகளை மாற்றிக் கொள்கிறது. மேலே சொன்ன பார்முலா =D21+C22 என மாற்றப்படும். ஆனால் ஒர்க்ஷீட் பெயர் இணைந்த பார்முலாவில் இந்த மாற்றம் முழுமையாக நடைபெறாது. ஒர்க்ஷீட் பெயர் மாற்றம் இருக்காது. எடுத்துக்காட்டாக, ஒர்க்புக் ஒன்றில் January, February, மற்றும் March என மூன்று ஒர்க்ஷீட்கள் வைத்துள்ளீர்கள். பிப்ரவரி ஒர்க்ஷீட்டில் =January!B7*1.075 என்ற பார்முலாவினை அமைத்திருக்கிறீர்கள். இந்த செல் பார்முலாவினை மார்ச் ஒர்க்ஷீட்டிற்கு மாற்றுகையில், எக்ஸெல் பார்முலாவில் உள்ள செல் தொடர்பை (B7) நீங்கள் மாற்றம் செய்திடும் செல்லுக்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொள்ளும். ஆனால் ஒர்க்ஷீட்டின் பெயர் பிப்ரவரி என மாறாது. உங்கள் ஒர்க்ஷீட்டில் ஒன்றிரண்டு ஒர்க்ஷீட்கள் இருந்தால், நீங்களாக இந்த மாற்றத்தினை மேற்கொள்ளலாம். அதிக எண்ணிக்கையில் ஒர்க்ஷீட்கள் இருந்தால் அது சிரமமான வேலையாக இருக்கும். இந்த சிரமத்தைப் போக்கும் வழியைப் பார்க்கலாம்.

1. முதலில் அனைத்து பார்முலாக்களையும் தேவையான ஒர்க்ஷீட்டிற்கு, தேவைப்படும் செல்லிற்கு மாற்றிக் கொள்ளுங்கள். இப்போது செல் பெயர்களில் எக்ஸெல் மாற்றத்தை மேற்கொண்டிருக்கும். அனைத்து காப்பி மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்ட பின், காப்பி செய்யப்பட்ட ஒர்க்ஷீட்டிற்குச் செல்லவும்.

2. இனி Ctrl+A அழுத்தவும். இது அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்கும்.

3. பின் எடிட் மெனு சென்று அதில் Replace தேர்ந்தெடுக்கவும். அல்லது Ctrl+H அழுத்தவும். இப்போது Find and Replace டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.

4. இதில் Find What பாக்ஸில் January! என டைப் செய்திடவும்.
5. அடுத்து Replace With பாக்ஸில் February! என டைப் செய்திடவும்.

6. பின் Replace All என்பதில் கிளிக் செய்தால் காப்பி செய்யப்பட்ட பார்முலாக்களில் உள்ள அனைத்தும் மாற்றப்படும். இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நாம் மேலே உள்ள ஸ்டெப் 4 மற்றும் 5ல் மாற்றுவது மாதங்களின் பெயரை அல்ல. பார்முலாவில் உள்ள சிறப்பு குறியீட்டுடன் உள்ள பெயரை மட்டுமே. ஏனென்றால் ஒர்க்ஷீட்டில் உள்ள மற்ற செல்களில் மாதங்களின் பெயர் இருந்தால், அவையும் இந்த மாற்றத்தில் மாற்றம் அடையும் அல்லவா!
எக்ஸெல்: பார்முலா கண்காணிப்பு
எக்ஸெல் தொகுப்பில் பெரிய அளவிலான ஸ்ப்ரெட் ஷீட்டில் பணியாற்றிய அனுபவம் பலருக்கும் உண்டு. அதில் பல்வேறு செல்களில் பார்முலாக்களைப் போட்டிருப்போம். செல்களில் மதிப்புகளைத் தருகையில் இந்த பார்முலாக்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாய் கணக்குகளை மேற்கொண்டு முடிவுகளை செல்களில் அமைக்கும்படி ஏற்பாடு செய்திருப்போம். இதனால் புதிய பார்முலாக்கள் அமைக்கையில் அவை தொடர்புடைய செல்களில் சரியாகச் செயலாற்றி விடைகளைத் தருகிறதா என்பதைக் கண்காணிக்க பல இடங்களில் உள்ள செல்களுக்குச் சென்று பார்க்க வேண்டியதிருக்கும். சில நேரங்களில் தவறான செல்களைப் பார்த்து தவறான தகவல்கள் மற்றும் பார்முலாக்களைத் தரும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு. இவற்றைத் தவிர்க்க எக்ஸெல் தொகுப்பு தரும் வசதி தான் எக்ஸெல் வாட்ச் விண்டோ.
அடுத்தடுத்து எக்ஸெல் பார்முலாக்கள் கணக்கிடுவதனைக் கண்காணிக்க நமக்குக் கிடைத்திருக்கும் வசதிதான் வாட்ச் விண்டோ. நாம் செல்களின் மதிப்பை மாற்றும்போதெல்லாம் சம்பந்தப்பட்ட செல்களில் என்ன மாறுதல்கள் ஏற்படுகிறது என்று நமக்குக் காட்டும் ஜன்னல் தான் இந்த வாட்ச் விண்டோ. இதனால் நாம் ஒவ்வொரு செல்லுக்கும் தாவிச் சென்று கண்காணிக்கும் வேலை மிச்சமாகிறது. இந்த வாட்ச் விண்டோவினை அமைத்திட முதலில் Tools மெனு சென்று அதில் துணை மெனுவான Formula Auditing என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின் அதில் உள்ள Show Watch Window என்பதனைக் கிளிக் செய்திட வேண்டும். Formula Auditing விண்டோவில் கண்கண்ணாடி படத்துடன் உள்ள சிறிய பிரிவுதான் Watch Window. இதனை கிளிக் செய்தவுடன் நமக்கு வாட்ச் விண்டோ கிடைக்கும். இப்போது எந்த செல்லில் உள்ள பார்முலா செயல்படுவதனைக் கவனிக்க விரும்புகிறீர்களோ அதனைத் தேர்ந்தெடுத்து Add Watch என்னும் பட்டனை அழுத்த வேண்டும். இப்போது வாட்ச் விண்டோவில் பார்முலா சம்பந்தப்பட்ட செல்கள் அவற்றின் மதிப்பு, கணக்கிடப்பட்ட விடை ஆகியவை தெரியும். இதே போல எந்த பார்முலாக்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க விரும்புகிறீர்களோ அவற்றை வரிசையாகத் தேர்ந்தெடுத்து Add பட்டனை அழுத்தினால் அவை அனைத்தும் Watch விண்டோவில் சேர்க்கப்படும். இந்த விண்டோனை மானிட்டரின் எந்த மூலையிலும் வைத்துக் கொள்ளலாம். இனி செல்களில் மதிப்புகளை மாற்றும் போதெல்லாம் இந்த பார்முலாக்கள் மூலம் எந்த செல்களில் மதிப்புகள் மாறுகின்றன என்று இந்த ஒரே விண்டோவில் கண்காணிக்கலாம். ஏதாவது ஒரு பார்முலா செயல்படுவதனைக் கண்காணிக்க விரும்பவில்லை என்றால் அதனை தேர்ந்தெடுத்து Delete Watch button ஐ அழுத்தி நீக்கிவிட்டு மற்ற பார்முலாக்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கலாம். ஒவ்வொரு செல்லுக்காய் மவுஸ் மூலம் ஓடி ஓடிப் பார்ப்பதனைத் தவிர்த்து ஒரே ஜன்னலில் அனைத்தையும் கண்காணிப்பது எவ்வளவு எளிது பாருங்கள்.
எக்ஸெல் ஷார்ட்கட் கீகள்
காமென்ட்ஸ் உள்ள செல்களை மட்டும் செலக்ட் செய்திட கண்ட்ரோல்+ஷிப்ட்+ஓ (Ctrl+Shft+O) அழுத்தவும். எந்த செல்லிலும் கமென்ட்ஸ் இல்லை என்றால் No cells found என்ற செய்தி கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும். Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.
ஷிப்ட் + ஆரோ கீ (Shft+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shft+Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
ஷிப்ட் + ஹோம் கீகள் (Shft+Home) அழுத்தப்படுகையில் படுக்கை வரிசையின் முதல் செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட்+ ஹோம் (Ctrl+Shft+ Home) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க் ஷீட்டின் முதல் செல் வரை நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட் + எண்ட் (Ctrl+Shft+End) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க்ஷீட்டில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட செல் வரையில் நீட்டிக்கப்படும்.
என்டர் கீ (Enter) அழுத்தப்படுகையில் அந்த செல் முடிக்கப்பட்டு கர்சர் கீழாக உள்ள செல்லுக்குச் செல்லும்.

கண்டறிந்து மாற்று (Find and Replace)










வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு சொல் அல்லது சொல் தொடருக்குப் பதிலாக நாம் வேறு சொற்களை அல்லது சொல் தொடர்களை அமைக்கலாம். இதற்காக ஒவ்வொன்றாகத் தேடித் தேடி அமைக்க வேண்டிய தில்லை. இந்த தொகுப்பில் உள்ள Find and Replace டூல் இந்த செயலை மேற்கொள்ளும். ஆனால் இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. நாம் மாற்றி அமைக்க விரும்பும் டெக்ஸ்ட் 255 கேரக்டர்களுக்குள் இருக்க வேண்டும். இல்லையே சிக்கல் ஏற்படும். அல்லது ஏதேனும் கிராபிக் ஆப்ஜெக்டாக இருந்தாலும், இதன் மூலம் மேற்கொள்ள முடியாது. ஆனால் இந்த விதியை நாம் மாற்ற முடியும். அதற்கான வழியை இங்கு பார்க்கலாம்.
1. முதலில் எந்த டெக்ஸ்ட் அல்லது கிராபிக்ஸ் படத்தை மாற்ற வேண்டுமோ, அதனை காப்பி செய்து கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லுங்கள். காப்பி செய்தாலே அது கிளிப் போர்டில் அமர்ந்து கொள்ளுங்கள்.
2. அடுத்து எடிட் (Edit) மெனு செல்லுங்கள். வேர்ட் 97 மற்றும் பின்னர் வந்தவேர்ட் தொகுப்புகளில் Find and Replace பாக்ஸ் கிடைக்கும். அதற்கு முந்தைய தொகுப்புகளில் (இன்னும் நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தால்) ரீபிளேஸ் டயலாக் பாக்ஸ் தனியே கிடைக்கும்.
3. Find What பாக்ஸில், எந்த டெக்ஸ்ட்டின் இடத்தில் நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட் அல்லது படத்தை ரீபிளேஸ் செய்திட வேண்டும் என்பதனை அமைத்திடுங்கள்.
4. அடுத்து Replace With பாக்ஸில் ^c அழுத்துங்கள். இந்த கட்டளை வேர்டுக்கு கிளிப் போர்டில் உள்ளதை இங்கு கொண்டு வா என்று சொல் கிறது.
5. அடுத்து Find Next என்பதில் கிளிக் செய்தி டவும்.
இப்படி யே நீங்கள் விரும்பிய வகையில் ரீபிளேஸ் செய்திடலம.

கண்டறிந்து மாற்று (Find and Replace)










வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு சொல் அல்லது சொல் தொடருக்குப் பதிலாக நாம் வேறு சொற்களை அல்லது சொல் தொடர்களை அமைக்கலாம். இதற்காக ஒவ்வொன்றாகத் தேடித் தேடி அமைக்க வேண்டிய தில்லை. இந்த தொகுப்பில் உள்ள Find and Replace டூல் இந்த செயலை மேற்கொள்ளும். ஆனால் இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. நாம் மாற்றி அமைக்க விரும்பும் டெக்ஸ்ட் 255 கேரக்டர்களுக்குள் இருக்க வேண்டும். இல்லையே சிக்கல் ஏற்படும். அல்லது ஏதேனும் கிராபிக் ஆப்ஜெக்டாக இருந்தாலும், இதன் மூலம் மேற்கொள்ள முடியாது. ஆனால் இந்த விதியை நாம் மாற்ற முடியும். அதற்கான வழியை இங்கு பார்க்கலாம்.
1. முதலில் எந்த டெக்ஸ்ட் அல்லது கிராபிக்ஸ் படத்தை மாற்ற வேண்டுமோ, அதனை காப்பி செய்து கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லுங்கள். காப்பி செய்தாலே அது கிளிப் போர்டில் அமர்ந்து கொள்ளுங்கள்.
2. அடுத்து எடிட் (Edit) மெனு செல்லுங்கள். வேர்ட் 97 மற்றும் பின்னர் வந்தவேர்ட் தொகுப்புகளில் Find and Replace பாக்ஸ் கிடைக்கும். அதற்கு முந்தைய தொகுப்புகளில் (இன்னும் நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தால்) ரீபிளேஸ் டயலாக் பாக்ஸ் தனியே கிடைக்கும்.
3. Find What பாக்ஸில், எந்த டெக்ஸ்ட்டின் இடத்தில் நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட் அல்லது படத்தை ரீபிளேஸ் செய்திட வேண்டும் என்பதனை அமைத்திடுங்கள்.
4. அடுத்து Replace With பாக்ஸில் ^c அழுத்துங்கள். இந்த கட்டளை வேர்டுக்கு கிளிப் போர்டில் உள்ளதை இங்கு கொண்டு வா என்று சொல் கிறது.
5. அடுத்து Find Next என்பதில் கிளிக் செய்தி டவும்.
இப்படி யே நீங்கள் விரும்பிய வகையில் ரீபிளேஸ் செய்திடலம.

யு-டியூப்பில் இருந்து வீடியோக்கள் டவுண்லோட்



யு–ட்யூப்பில் பதிந்து வைத்துள்ள வீடீயோ கிளிப்கள் எதைப் பார்த்தாலும், உடனே அதனை டவுண்லோட் செய்து இறக்கி வைத்துக் கொள்ள ஆசையாக இருக்கும். இதற்காகவே பல யு–ட்யூப் டவுண்லோட் புரோகிராம்கள் பல இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில் பல கண்டிஷன்கள் இருக்கும். சில 60% மட்டுமே டவுண்லோட் செய்திடும். சில 10 அல்லது 20 முறை மட்டுமே டவுண்லோட் செய்திட அனுமதிக்கும். சில குறிப்பிட்ட நாள் வரை மட்டுமே இயங்கும். அல்லது கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்.இவற்றின் மூலம் ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே டவுண்லோட் செய்திட முடியும். ஒரே நேரத்தில் பல யு–ட்யூப் வீடியோக்களை முழுமையாக டவுண்லோட் செய்திடும் வகையில் இணையத்தில் புரோகிராம் ஒன்று கிடைக்கிறது. இதன் பெயர் 1Click YouTube Batch Downloader. இதனை http://eurekr.com /index.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். ஒன்றுக்கு மேற்பட்ட யு–ட்யூப் வீடியோக்களை, அவற்றின் இணையதள முகவரி சென்று தேடிப் பெற்று காப்பி செய்வதனைக் காட்டிலும், இதன் மூலம் ஒரேகிளிக்கில் காப்பி செய்திடலாம். அது மட்டுமின்றி, இந்த வீடியோக்களை mp4, wmv, மற்றும் mov என்ற பார்மட்டுகளுக்கு மாற்றவும் இந்த புரோகிராம் உதவுகிறது. அத்துடன் பல வீடியோ பைல்களை ஒரே பைலாக மாற்றும் வசதியையும் இது தருகிறது.

குரோம் எக்ஸ்டென்ஷன் வசதிகள்


பயர்பாக்ஸ் பிரவுசருக்கென ஆயிரக்கணக்கில் ஆட் ஆன் புரோகிராம்கள் இருப்பது போல, குரோம் பிரவுசருக்கும் பல கூடுதல் வசதிகளைத் தரும் புரோகிராம்கள், இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றை எக்ஸ்டென்ஷன் புரோகிராம்கள் என அழைக்கின்றனர். குரோம் பதிப்பு 4 அண்மையில் வெளியான போது, இது போன்ற புதிய வசதிகள் 1,500 இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த புரோகிராம்கள், நாம் குரோம் பிரவுசர் வழியாக இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்கையில், கூடுதல் வேலைகளுக்கான வசதிகளை எளிதாகவும், எளிமையாகவும் தருகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
பாப் அப் விண்டோவில் விக்கிபீடியா: ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்து விக்கிபீடியா தளம் சென்று தேடுபவரா நீங்கள்? நீங்கள் கூகுள் குரோம் பிரவுசரில், இன்டர்நெட் பிரவுசிங் செய்திடுகையில், விக்கிபீடியா பார்ப்பவராக இருந்தால், இனி புதிய டேப் அமைத்து, தளம் திறந்து பார்க்க வேண்டியதில்லை. பார்க்கின்ற தள விண்டோவிலேயே, ஒரு பாப் அப் விண்டோவில் விக்கிபீடியா தளத்தினைக் காணும் வசதி கிடைத்துள்ளது. விக்கிபீடியா கம்பேனியன் (Wikipedia Companion) என்னும் இந்த புதிய வசதி இந்த பாப் அப் விண்டோவைத் தருகிறது. விக்கிபீடியா கம்பேனியன் மூலம், குரோம் பிரவுசர் விண்டோவின் இடது பக்கத்தில் ஒரு விக்கிபீடியா பட்டன் ஒன்றை உருவாக்கலாம். மேலும் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் சார்ந்த விக்கிபீடியா தளத்தினைப் பார்ப்பவராக இருந்தால், அதற்கான செட்டிங்ஸையும் மேற்கொண்டு, அதே பாப் அப் விண்டோவில் காணலாம். ஒரே கிளிக் மூலம் இதனை மேற்கொள்ளலாம்.


1. முதலில் கூகுள் குரோம் பிரவுசர் மூலம் கீழ்க்காணும் முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். https://chrome.google.com /extensions/detail/dhgpkiiipkgmckicafkhcihkcldbde. இந்த தளம் விக்கிபீடியா கம்பேனியன் என்னும் ஆட் ஆன் எக்ஸ்டென்ஷன் புரோகிராமினைக் கொண்டிருக்கும். அதில் உள்ள இன்ஸ்டால் பட்டனில் கிளிக் செய்தால், Confirm Installation என மீண்டும் ஒரு இன்ஸ்டால் பட்டன் தரப்படும். இதில் கிளிக் செய்தால், இந்த புரோகிராம் இன்ஸ்டால் ஆகும். இதன்பின் விக்கிபீடியா ஐகானைக் கிளிக் செய்து பிரவுசரைத் திறக்கவும். இதில் ஆப்ஷன்ஸ் என்னும் லிங்க்கினைக் கிளிக் செய்தால், எந்த மொழி விக்கிபீடியா முதன்மையானதாகவும் (Primary) எந்த மொழியில் உள்ள விக்கிபீடியா இரண்டாவது நிலையிலும் (Secondary) தேவைப்படும் என்பதனை செட் செய்திடலாம். விக்கிபீடியா தளத்தினை தனி டேப் மூலம் திறக்க விரும்பினாலும், அதன்படி செட் செய்திடலாம்.
2. பிரவுசரில் நோட்பேட் : இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்கையில், சிறிய குறிப்புகளை எழுத எண்ணுகிறீர்கள். இதற்கென நோட்பேட், வேர்ட்பேட் அல்லது வேறு ஒரு வேர்ட் ப்ராசசரைத் திறந்து, குறிப்புகளை அமைப்பது என்றால், அது சுற்றி வளைத்து வேலை பார்ப்பதாக இருக்கும். இருப்பினும் வேறு வழியில்லை. இந்த சிக்கலைத் தீர்ப்பதற்காக, குரோம் பிரவுசருக்குள்ளாகவே நோட்பேட் இயங்கும் வகையில் ஒரு எக்ஸ்டென்ஷன் புரோகிராம் கிடைக்கிற. குரோம்பேட் (Chrome Pad) என்பது இதன் பெயர். https://chrome.google.com/e xtensions/detail/kodgendbhboaendecabighpnngpodeij என்ற முகவரியில் உள்ள தளத்தில் இந்த புரோகிராமினைப் பெறலாம். இங்கு சென்று அங்குள்ள Install பட்டனில் கிளிக் செய்தால், Confirm Installation என மீண்டும் ஒரு Install பட்டன் தரப்படும். இதில் கிளிக் செய்தால், இந்த புரோகிராம் இன்ஸ்டால் ஆகும். இதன்பின் சிறிய பேட் உங்கள் குறிப்புகளுக்கென கிடைக்கும்.
3.யு–டியூப் சர்ச்: கூகுள் குரோம் பிரவுசரில் ஏதேனும் ஒரு தளத்தினைக் காண்கையில், அந்த பொருள் குறித்த வீடியோ ஏதேனும் யு–டியூப் தளத்தில் உள்ளதா என்று அறிய விரும்பலாம். அப்போது புதிய டேப் ஒன்றைத் திறந்து, அதில் யு–டியூப் தளம் சென்று தேட வேண்டிய திருக்கும். அல்லது சர்ச் பாக்ஸில் உங்கள் வீடியோ குறித்த சொல் கொடுத்துத் தேடிப் பின் மீண்டும் அந்த தளம் செல்ல வேண்டியதிருக்கும். இந்த வேலைப் பளுவினைக் குறைக்கும் வகையில் “Fast YouTube Search” என்னும் எக்ஸ்டென்ஷன் புரோகிராம் ஒன்று தரப்பட்டுள்ளது. இதன் மூலம் யு–டியூப் சர்ச் பட்டன் ஒன்றை பிரவுசரில் ஒட்ட வைத்துக் கொள்ளலாம். இந்த எக்ஸ்டென்ஷன் புரோகிராமினைப் பெற https://chrome.google .com/extensions/detail/ggkljdkflooidjlkahdnfgodflkelkai என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இங்கு சென்று அங்குள்ள Install பட்டனில் கிளிக் செய்தால், Confirm Installation என மீண்டும் ஒரு Install பட்டன் தரப்படும். இதில் கிளிக் செய்தால், இந்த புரோகிராம் இன்ஸ்டால் ஆகும். பின் அட்ரஸ் பார் வலது பக்கத்தில் “YouTube” என்று ஒரு பட்டன் கிடைக்கும். இதில் கிளிக் செய்தால்,சர்ச் பாக்ஸ் ஒன்று தரப்படும். இதில் உங்கள் தேடுதல் சொற்களை அமைத்துத் தேடவும். அதன்பின் மேக்னிபையிங் கிளாஸ் பட்டனில் கிளிக் செய்து சம்பந்தப்பட்ட வீடியோக்களைக் காணலாம். உங்கள் தேடுதல் சொற்களை அமைக்கும்போதே, அதற்கான சில கூடுதல் குறிப்புகளும் காட்டப்படும்.
4. கால்குலேட்டர்: கூகுள் தேடல் இஞ்சினில் கால்குலேட்டர் இணைந்தே வருகிறது. இதில் சில அடிப்படை கணக்குகள், கரன்சி மாற்றும் கணக்குகள், அளவை அலகு மாற்றங்கள் ஆகியவற்றைக் கணக் கிடலாம். இருப்பினும், ஏதேனும் ஒரு இன்டர்நெட் வெப்சைட்டில் இருக்கையில், அதனை விட்டு இன்னொரு டேப்பில் கூகுள் தேடல் தளம் சென்று, கால்குலேட்டரை இயக்குவது சிரமமாகும். இதனைத் தீர்க்க குரோமி கால்குலேட்டர் (“Chromey Calculator”) என்னும் எக்ஸ்டென்ஷன் புரோகிராம் ஒன்று தரப்பட்டுள்ளது. இதன் மூலம் கால்குலேட்டர் பட்டன் ஒன்றை, நேரடியாக குரோம் பிரவுசரிலேயே அமைக்கலாம்.இதில் கிளிக் செய்வதன் மூலம் கூகுளின் கால்குலேட்டரைப் பெற்று இயக்கலாம். இந்த கால்குலேட்டரில் சில மதிப்புகளை (Values) குறியீடுகளுக்கு பொருத்தி கணக்கிடலாம்.
இந்த எக்ஸ்டென்ஷனைப் பெற்று இயக்க https://chrome.google.com/extensions/detail/acgimceffoceigocablmjdpebeodphgc என்னும் முகவரியில் உள்ள தளம் செல்லவும். மேலே கூறப்பட்டுள்ளபடியே இங்கும் இன்ஸ்டால் செய்திடவும். “Chromey Calculator” இன்ஸ்டால் செய்யப்படும். அட்ரஸ் பாரில் இதற்கான பட்டன் கிடைக்கும். இதனை அழுத்தி கால்குலேட்டரைப் பெற்று இயக்கலாம்.

5. டேப்பில் ரைட் கிளிக் மெனு: இது எக்ஸ்டென்ஷன் புரோகிராம் குறித்தது அல்ல. டேப்கள் செயல்பாடு குறித்தது. கூகுள் குரோம் பிரவுசரில் உள்ள டேப்களில் ரைட் கிளிக் செய்து, கூடுதல் டேப் செயல்பாடுகளுக்கான வசதிகளைப் பெறலாம். இதில் உள்ள டேப்பில் ரைட் கிளிக் செய்தால் மெனு ஒன்று கிடைக்கும். அதில் கீழ்க்காணும் வசதிகள் தரப்படும். அவை:
Duplicate: அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் தளத் தகவல்கள் இன்னும் ஒரு கூகுள் குரோம் விண்டோவில் நகலாகக் கிடைக்கும்.
Close other Tabs: அப்போதைய டேப் தவிர, மீதம் உள்ள டேப்களில் உள்ள தளங்கள் அனைத்தும் மூடப்படும்.
Close Tabs to the Right: அப்போது தேர்ந்தெடுத்து கிளிக் செய்யப்படும் டேப்பிற்கு வலது பக்கம் உள்ள டேப்கள் அனைத்தும் மூடப்படும்.
Reload: அந்த டேப்பில் உள்ள தளத்தினை மீண்டும் லோட் செய்திடும். இதனை Ctrl + R அழுத்தியும் பெறலாம்.
Close Tab: அந்த டேப்பில் உள்ள தளத்தினை மூடும்.



எம்.எஸ்.ஆபீசுக்கு இணையான அப்ளிகேஷன்கள்


மைக்ரோசாப்ட் ஆபீஸ் என்னும் அப்ளிகேஷன் சாப்ட்வேர், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடையே அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு சாப்ட்வேர் தொகுப்பாகும். வேர்ட் டாகுமெண்ட், ஸ்ப்ரெட்ஷிட், பிரசன்டேஷன் டூல் என இன்னும் பல பயனுள்ள தொகுப்புகளைத் தன்னிடத்தே அடக்கிக் கொண்டு, உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு சாப்ட்வேர் இது.
முன்பு கம்ப்யூட்டரை நிறுவனங்களிடம் வாங்கினாலும், கிரே மார்க்கட்டில் அசெம்பிள் செய்து வாங்கினாலும், தனிநபர் பயன்பாட்டுக்கென வாங்குபவர்கள், எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பை இலவசமாகப் பதிந்து தர கேட்பார்கள். இதனால் இந்த ஆபீஸ் தொகுப்பு, தனி நபர்களின் கம்ப்யூட்டர்களில் காப்பி எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படும் சாப்ட்வேர் தொகுப்பாகவே இருந்து வந்தது, வருகின்றது. ஆனால், இப்போது இன்டர்நெட் இணைப்பு என்பது ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் அமைந்துவிட்ட நாளில், மைக்ரோசாப்ட் எந்தக் கம்ப்யூட்டர்களில், ஒரிஜினல் லைசன்ஸ் இல்லாத ஆபீஸ் தொகுப்பு களைக் கண்டறிந்து எச்சரிக்கை விடுக்கிறது. அதில் பிரச்னைகள் ஏற்பட்டால் உதவிக் குறிப்புகளைத் தர மறுக்கிறது. இன்னும் சில நாட்களில் இவற்றை இயங்கவிடாமல் செய்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
ஆபீஸ் தொகுப்பினைக் கட்டணம் செலுத்தி வாங்கிப் பயன்படுத்த பலரும் முன்வருவதில்லை. ஏனென்றால், ஒரு சில நாடுகளில் அதன் விலை மக்களின் வாங்கும் சக்திக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. இதனால் தான் திருட்டு நகல் சாப்ட்வேர் பரவி வருகின்றது. ஆனால் இது போன்ற திருட்டு நகல் ஆபீஸ் தொகுப்பு பயன்படுத்துவதற்குப் பதிலாக, நாம் இணையத்தில் ஆபீஸ் தொகுப்பிற்கு இணையாக இலவசமாகக் கிடைக்கும் தொகுப்புகளை டவுண்லோட் மற்றும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். அந்த தொகுப்புகள் குறித்து இங்கு காணலாம்.
1. ஓப்பன் ஆபீஸ் (Open Office. org): எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பிற்கு இணையாகப் பயன்படுத்தக் கூடிய ஒரு தொகுப்பு ஓப்பன் ஆபீஸ் தொகுப்பாகும். இதற்கென இத்தொகுப்பினை வழங்குபவர்களுக்கு பல விருதுகள் தரப்பட்டுள்ளன. உங்கள் டாகுமென்ட், ஸ்ப்ரட்ஷீட், பிரசன்டேஷன் பைல்களை, இந்தத் தொகுப்பிலும் எளிதாகவும் பயனுள்ள வகையிலும் பயன்படுத் தலாம். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளம் முகவரி: http://why.openoffice.org/ . இது ஒரு ஓப்பன் சோர்ஸ் கோடிங் முறையில் உருவானது என்பதால், நீங்கள் ஒரு புரோகிராமராக இருந்தால், இதன் புரோகிராமிங் வரிகளைப் பெற்று, உங்களுக்குத் தேவையானபடி இதனை வளைத்து அமைத்துக் கொள்ளலாம்.
2. ஐ.பி.எம். லோட்டஸ் சிம்பனி (IBM Lotus Symphony): பலவகையான பயனுள்ள வசதிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு தொகுப்பு. இதில் லோட்டஸ் சிம்பனி டாகுமெண்ட்ஸ், லோட்டஸ் சிம்பனி ஸ்ப்ரெட் ஷீட்ஸ், லோட்டஸ் சிம்பனி பிரசன்டேஷன்ஸ் என ஆபீஸ் தொகுப்பின் வசதிகள் தரப்பட்டுள்ளன. இதனைப் பெறhttp://symphony.lotus.com/software/lotus /symphony/home.nsf/home ன்றமுகவரிக்குச் செல்லவும்.
3. கூகுள் டாக்ஸ் அன்ட் ஸ்ப்ரெட் ஷீட்ஸ் (Google Docs and Spreadsheets):: இணையத்தில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பிற்கு இணையாக கூகுள் தரும் தொகுப்பு இது. இத்தொகுப்பில் உள்ள வசதிகள் இதனை நிரூபிக்கின்றன. நீங்கள் ஆன் லைனில் இதனைப் பயன்படுத்தலாம் என்றாலும், ஆப் லைனில், இன்டர்நெட் இணைப்பு இல்லாதபோதும் பயன்படுத்தி பின்னர் முந்தைய டாகுமெண்ட்டுடன் இணைத்துக் கொள்ளும் வசதியையும் இது தருகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய முகவரி http://docs.google.com/

4.ஸோஹோ சூட்(Soho Suite): இதுவும் ஒரு ஆன்லைன் அப்ளிகேஷன் புரோகிராம். இதில்Zoho Writer, Zoho Sheet and Zoho Show எனப் பலவகையான டாகுமெண்ட்களை உருவாக்கும் வசதிகள் தரப்பட்டுள்ளன. இந்த தொகுப்பும் ஆப் லைனில் டாகுமெண்ட்களை எடிட் செய்து, பின் அப்டேட் செய்திடும் வசதியைக் கொண்டுள்ளது. இதனைப் பெற்றுப் பயன்படுத்த http://www.zoho. com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திற்குச் செல்லவும்.
5. கே ஆபீஸ் (K Office) : நீங்கள் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துபவராக இருந்தால், இந்த ஆபீஸ் சூட் உங்களுக்குப் பயன்படுத்த எளிதாக இருக்கும். இதில் அனைத்து அப்ளிகேஷன் வசதிகளும் உள்ளன. இதனை டவுண்லோட் செய்திட நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி: http://www.koffice.org/ மேலே காட்டப்பட்டுள்ள ஆபீஸ் தொகுப்புகள் தவிர, சில குறிப்பிட்ட அப்ளிகேஷன்களுக்கு (வேர்ட், எக்ஸெல், பிரசன்டேஷன் போன்றவை) மட்டும் பதிலியாகப் பல சாப்ட்வேர் தொகுப்புகள் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.
6.ஓப்பன் ஆபீஸ் கால்க் (Open Office Calc): மைக்ரோசாப்ட் எக்ஸெல் அப்ளிகேஷனுக்கு இணையானது இந்த புரோகிராம். இதில் கூடுதலாக டேட்டா பைலட்
(Data pilot) என்ற ஒரு வசதி தரப்பட்டுள்ளது. நிறுவனங்களின் டேட்டா பேஸ் தொகுப்பிலிருந்து டேட்டாவைப் பெற்று, பலவகைகளில் அவற்றைக் கையாளும் திறன் பெற்றது. இதன் மூலம் பல தெளிவுள்ள முடிவுகளை எடுக்க இது உதவிடும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.openoffice.org/product/calc.html
7. அபிகஸ் (Abykus): அபிகஸ் 2.0 என்ற இந்த புரோகிராம் ஒரு ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம் ஆகும். இது வர்த்தகம் மற்றும் அறிவியல் சார்ந்த தகவல்களைக் கையாளப் பல வழிகளைத் தருகிறது. இதில் புள்ளிவிபரங்களைக் கையாண்டு தீர்வுகளைப் பெற ஸ்டேட்டிஸ்டிகல் விஸார்ட் தரப்படுகிறது. 190க்கும் மேலான கணக்கு பார்முலாக்கள், மேட்ரிக்ஸ் பயன்பாடுகள், நாள், நேரம் சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய சமன்பாடுகள், முப்பரிமாண கிராபிக்ஸ் வசதிகள் தரப்பட்டுள்ளன. எந்த ஒர்க்ஷீட்டையும் இதில் திறந்து பயன்படுத்தலாம். இதனைப் பெற http://www.abykus.com/என்னும் முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
8. கிளீன் ஷீட்ஸ் (CleanSheets): : அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங் களிலும் பயன்படுத்தக் கூடிய முதல் ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம். இது ஜாவா கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளதால், இதனைப் பயன்படுத்த ஜாவா உங்கள் கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும். இதனைப் பெறhttp://csheets.sourceforge.net/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
9. ஸ்ப்ரெட் 32 (Spread32): இது ஒரு சிறிய ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம். இதில் 256 நெட்டு வரிசையும், 65536 படுக்கை வரிசையும் கொண்ட மேட்ரிக்ஸ் தரப்படுகிறது. 255 ஒர்க்ஷீட் கொண்டுள்ளது. 300க்கு மேற்பட்ட பார்முலா செயல்பாடுகளை இதில் மேற்கொள்ளலாம். இதனைப் பயன்படுத்த நீங்கள் செல்ல வேண்டிய இணைய முகவரி http://www.xtort.net /officeandproductivity/floppyoffice//
10.எடிட் கிரிட் (EditGrid): இது ஒரு ஆன்லைன் ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம். எக்ஸெல் புரோகிராம் தரும் அனைத்து வசதிகளும் இதில் கிடைக்கும். டேட்டா வினை இதனுடன் தொடர்புபடுத்தி, பின் எக்ஸெல் தரும் வசதிகளுக்கும் மேலான வசதிகளைப் பயன்படுத்தி, நாம் முடிவிற்கான ஸ்ப்ரெட்ஷீட்களை இதன் மூலம் தயாரிக்கலாம். இதனைப் பெறhttp://www.editgrid.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இணைய தளங்கள் பலவற்றில் இது போல ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம்கள் வெவ்வேறு வசதிகளுடன் உள்ளன. அவற்றில் Google Spread sheets, Zoho Sheets, Num Sum, Simple Spreadsheet, wikiCalc, ZCubes Calci ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

படங்களுக்கு மெருகூட்ட இமேஷ் டூல்ஸ்

படங்களுக்கு மெருகூட்ட இமேஷ் டூல்ஸ்




படங்களை நம் கற்பனைத்திறனுக்கேற்ற வகையில் அமைக்க, இமேஜ்களைக் கையாளும் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் உள்ளன. இருப்பினும் இவற்றை விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்துவது என்பது அனைவராலும் முடியாத ஒரு விஷயமாகும். தொழில் ரீதியாகவும், பயன்படுத்திப் பார்க்கும் ஆசையிலும் இலவச இமேஜ் டூல்ஸ்களை பலர் எதிர்பார்க்கின்றனர். இணையத்தில் இந்த நோக்கத்தில் தேடுகையில், ஒரு சில குறிப்பிட்ட வகையில் இமேஜ்களை எடிட் செய்திடும் வகையில் பல புரோகிராம்கள் இலவசமாகக் கிடைப்பது தெரிய வந்தது. அவை குறித்த பட்டியல் இங்கு தரப்படுகிறது. இவற்றை இயக்கிப் பார்த்துப் பயன் பெறுவது உங்களின் திறமையைப் பொறுத்தது.
1. வாட்டர் மார்க் இமேஜ் (Water Mark Images): உங்கள் படங்களுக்கு வாட்டர் மார்க் அமைத்திட வேண்டுமா? மொத்தமாக 20 படங்கள் வரை இணைத்து அமைத்திட ஒரு புரோகிராம் உதவுகிறது. படங்களைத் தயார் செய்து, வரிசைப்படுத்தி, அவற்றுக்கான வாட்டர்மார்க்கில் இடம் பெற வேண்டிய எழுத்துக்களை ஒழுங்கு செய்து, அதன் இடத்தை வரையறை செய்து, அவற்றிற்கு விருப்பப்பட்டால், ஷேடோ எபக்ட் கொடுத்து அமைக்கலாம். இதன் பெயர் WatermarkImages. இதனை http://watermarkimages.com/என்ற முகவரியில் பெறலாம்.
2. பிக்ஸ் ரெட் ஐஸ் (Fix Red Eyes): டிஜிட்டல் போட்டோக்களை எடுக்கையில் நம் கண்களில் சிகப்பு புள்ளிகள் அமைவது தவிர்க்க முடியாததாக, சில டிஜிகேம்களில், அமைந்துவிடும். பல கேமராக்களில் இவற்றை நீக்குவதற்கான செட்டிங்ஸ் கொடுத்திருந்தாலும், சில வேளைகளில் கண்களில் சிகப்பு கோளங்கள் அமைந்துவிடுகின்றன. இந்த சிகப்பு வளையங்கள் அல்லது கோளங்களை நீக்கினால் தான் படங்கள் பார்க்கும் வகையில் அமையும். இதற்கான வசதியினை http://www.fixredeyes .com// என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம். இந்த தளத்திற்கு, இவ்வாறு சிகப்பு கோளங்கள் நீக்க வேண்டிய இமேஜ்களை அப்லோட் செய்திட வேண்டும். பின் அவற்றை சிகப்பு கோளங்களை அடையாளம் காட்டி, பிக்ஸ் (Fix) செய்திட கட்டளை கொடுத்தால், அவை நீக்கப்பட்டு போட்டோக்கள், நல்ல முகங்களுடன், சிறப்பாகக் கிடைக்கின்றன.
3. இமேஜ் ஸ்பிளிட்டர் (Image Splitter): படங்களைப் பிரித்து பல நெட்டு மற்றும் குறுக்கு வரிசைகளில் அமைக்க விரும்புகிறீர்களா? கவலையே பட வேண்டாம். உங்கள் படத்தைhttp://www.htmlkit.com/ services/is/ என்னும் தளத்திற்கு அப்லோட் செய்திடுங்கள். பின் எத்தனை நெட்டு மற்றும் படுக்கை வரிசை என்று தேர்ந்தெடுங்கள். எந்த இமேஜ் பார்மட்டில் படம் தேவை என்பதனையும், அதன் ரெசல்யூசன் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதனையும் கொடுத்திட்டால், படம் நீங்கள் விரும்பிய வகையில் கிடைக்கும்.
4. இமேஜ் மெர்ஜர் (Image Merger): இரண்டு படங்களில் ஒன்றைப் பின்னணியிலும், மற்றொன்றை முன்பகுதிப் படமாகவும் அமைக்க விரும்புகிறீர்களா! இதற்கென ஒரு ஆன்லைன் டூல் கிடைக்கிறது. http://www.imagemerger.net/என்ற முகவரி உள்ள தளத்திற்கு இரண்டு படங்களையும் அப்லோட் செய்திடுங்கள். முதல் படம் பின்னணியிலும், அடுத்த படம் முன் இடத்திலும் இருக்கும்படி அமைக்கப்படும்.
5. மிரர் எபக்ட் (Mirror Effect): எந்தப் படத்திற்கும், அதன் வலது இடது பக்கங்களிலோ அல்லது மேல் கீழாகவோ, அச்சாக ஒரு கண்ணாடி பிம்பம் தோன்றும் வகையில் படத்தை மெருகூட்டி அமைக்கலாம் http://www.mirroreffect.net/ என்ற தளத்திற்கு படத்தை அப்லோட் செய்திடுங்கள். அடுத்து பிரதிபலிக்க வேண்டியதற்கான அளவைக் கொடுக்க வேண்டும். கீழ், மேல், இடது மற்றும் வலது என எந்த வகையில் பிரதிபலிக்க வேண்டும் என்பதனையும் அமைத்திட்டால், அழகான பிம்பத்துடன் கூடிய படமாக உங்கள் இமேஜ் அமைக்கப்பட்டுத் தரப்படும்.
6. டெஸ்ட் இமேஜ் (Text Image): போட்டோ ஒன்றை டெக்ஸ்ட் இமேஜ் ஆக மாற்றுவதற்கு ஒரு தளம் உதவுகிறது. இதன் முகவரி http://www.textimage.com/index.html HTML, ASCII or Matrix என்ற வகைகளில் எந்த வகையில் உங்களுக்கு வேண்டும் என தேர்ந்தெடுத்து தந்தால், இந்த தளம் அவ்வாறே அமைத்துத் தருகிறது.
7. ஸ்பீச் பப்பிள்ஸ் (Speech bubbles): சித்திரக் கதை பார்த்திருப்பீர்கள். குழந்தைகளாய் இருக்கும்போது இவற்றைப் படித்து ரசிக்காமல் இருந்திருக்க மாட்டோம். வளர்ந்த பின்னர் இந்த படங்களுக்குப் பதிலாக நம் போட்டோக்களை வைத்து ஏன் அமைக்கக்கூடாது என்ற ஆர்வம் வந்திருக்கும். நம் குழந்தைகளின் படங்களையே வைத்து அமைக்கலாமே என்று ஆசைப்பட்டிருக்கலாம். அப்படியானால் படங்களுக் கான வசனங்களை தயார் செய்து அவற்றை படங்களுக்கு மேலாகக் குமிழ்களை உருவாக்கி அமைக்க வேண்டுமே! உங்களின் இந்த ஆசைகளுக்காகவே ஒரு தளம் உள்ளது. http://speechable.com/ என்ற முகவரியில் உள்ள தளம் இந்த வசதியை அமைக்க உங்களுக்கு உதவுகிறது. அமைய இருக்கின்ற டெக்ஸ்ட் மற்றும் பப்பிள் சைஸ் ஆகியவற்றை வரையறை செய்து அமைத்தால் போதும். படம் மாற்றப்பட்டு கிடைக்கும்.
8. வாட்டர் எபக்ட் (Water Effect): சில அழகான நீர்நிலைக் காட்சிகளைப் பார்த்திருப்பீர்கள். அருகே இருக்கும் மரங்கள், பறவைகள், வானத்தில் உள்ள நிலா ஆகிய எல்லாம் அப்படியே பிம்பங்களாக நீர் அலைகளில் உருவத்தை ஒட்டி தலைகீழாகக் காட்டப்பட்டு அழகாக இருக்கும். நம் உருவங்களை இப்படிப் பார்க்க வேண்டுமே என்ற ஆவல் உள்ளதா? இதற்காக நாம் நீர்நிலைகளைத் தேடி, ஒளி சரியாகப்பட்டு, பிம்பங்கள் அசையாத நிலைக்குக் காத்திருந்து பின் போட்டோ எடுப்பது என்பது நிச்சயம் அனைவருக்கும் கை கூடாது. ஏற்கனவே எடுத்த போட்டோக்களுக்கு இந்த எபக்ட் தருவதற்கென ஒரு தளம் உள்ளது. அதன் முகவரி http://www.watereffect.net/. இந்த இணைய தளம் சென்று, எந்த படத்திற்கு இந்த தலைகீழ் தண்ணீர் உருவம் வேண்டும் என எண்ணுகிறீர்களோ, அதனை அப்லோட் செய்திடவும். ஓரிரு நிமிடங்களில் நீர் அருகே படத்தில் உள்ளவர்கள் இருந்தால் எப்படி காட்சி இருக்குமோ, அந்த வகையில் போட்டோ கிடைக்கும். அந்த தளத்தில் போட்டோ இருக்கும் வரை, நீர் அசைவது போலவும், அதில் தெரியும் உருவப் பிம்பங்களும் அப்படியே அலை அலையாய் இருப்பது போலவும் காட்சி இருக்கும். அதை காப்பி செய்து நம் கம்ப்யூட்டரில் சேவ் செய்திட்டால் இந்த அனிமேஷன் இல்லாமல், பிம்பங்களுடன் போட்டோ இருக்கும்.
9. வளைவுகள் அமைக்க (Round Pic): உங்கள் படங்களின் மூலைகளில் அழகான வளைவுகள் அமைக்க வேண்டுமா? நீங்கள் எந்தப் படத்தை அப்லோட் செய்தாலும், அதன் ஓரங்களை வளைவுகளுடன் அமைத்துத் தருகிறது இந்த தளம்.வளைவுகள் எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை செட் செய்து, படத்தை அப்லோட் செய்திட்டால், படத்தின் காட்சி பிரிவியூவாகக் கிடைக்கும். உங்களுக்குப் பிடித்திருந்தால் ஓகே கொடுத்து படத்தைப் பெறலாம். இந்த தளத்தின் முகவரி: http://www.roundpic.com/
10. வேடிக்கையான படம் (Be Funky): உங்கள் படங்களுக்கு டிஜிட்டல் பெயிண்ட் அடிக்க வேண்டுமா! அல்லது அவற்றைக் கார்ட்டூன் படங்களைப் போல அமைக்க வேண்டுமா!http://www.befunky.com/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். படத்தைத் திறந்து, எந்த மூலையையும் இழுக்கவும். பலவகை பின்னணி மற்றும் துணை சாதன வசதிகளைப் பயன்படுத்தி கார்ட்டூன் வகையில் படத்தை மாற்றவும். உங்கள் படங்களை மை, பென்சில் போன்றவற்றில் வரைந்தது போலவும் மாற்றலாம். இந்த தளத்தில் வீடியோக்களுக்கும் கார்ட்டூன் எபக்ட் தர முடியும்.